Rasi Palan 19th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 19th September 2019 rasi palan today
Rasi Palan 19th September 2019 rasi palan today

Rasi Palan Today 19th September 2019 in Tamil : அவரவர் விதிப்பயனை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால், அதனை நமது முன்னெச்சரிக்கை மூலம் ஓரளவு தவிர்க்க முடியும் என்பதும் உண்மை.

Rasi Palan 19th September 2019 : இன்றைய ராசி பலன் 19 செப்டம்பர் 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களது சிறப்பான செயல்களில் சிலவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், நீங்களே உங்களை போற்றிக் கொள்ளலாம். நீங்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கலாம், ஆனால் அவர்களது நலன்களுக்கு எதிராக செயல்படுவதற்கு அவற்றை கையாள வேண்டாம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நல்ல கம்யூனிகேஷன் இருந்தால், இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாகும். புதிய வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையின் அம்சங்களை அறிய அடிக்கடி கட்டாயப்படுத்தப்படுவீர்கள். வெற்றிகரமான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எந்தவொரு செயலிலும் நிலையான ஒரு முடிவை உங்களால் எடுக்க முடியாது. வீட்டிற்குள்ளேயே இருந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கடின உழைப்பும், குழப்பமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். சந்திரன் உங்களது மனவலுவை அதிகரிக்கும். சந்திரன் ஆதிக்கம் தருவதால், நீங்கள் தவறாக ஏதும் செய்துவிடாமல் அது பாதுகாக்கும். ஆனால் உண்மைகளை விட நீங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்படலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளியிடங்கள் மற்றும் விருந்துகளுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

இன்று பணிகளை திறமையுடன் கையாளும் பொறுமை உங்களிடம் காணப்படாது. இதனால் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. சூழ்நிலையைக் கையாள அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இன்று பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள். பிரார்த்தனை சிறந்த பலன் தரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களிடம் காணப்படும் ஈகோ மனப்பான்மை உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். ளி இருமல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் நேர்மையான செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் இன்று உறுதி காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணிகள் இறுக்கமாக காணப்படும். பணிச் சூழலைக் கையாள்வதை கடினமாகவும் சவாலாகவும் உணர்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம்.