Rasi Palan 8th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th September 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 8th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 8th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 8th September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 8, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நண்பர்களின் கூட்டுமுயற்சியால் வெற்றி காணவேண்டிய நாள். கடினமான முடிவுகளை தயங்காமல் எடுப்பீர்கள். ஆச்சர்யகரமான திருப்பங்களை எதிர்கொள்வீர்கள். செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்கவேண்டியிருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அதிகம் மெனக்கெடுவீர்கள். நண்பர்களுடன் விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனதில் சஞ்சலம் நிறைந்திருப்பதால், நிம்மதியின்றி தவிர்ப்பீர்கள். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்வீர்கள். தக்கசமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சிரிப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் சிரிக்கவைத்து ஆனந்தம் கொள்வீர்கள். எண்ணிய காரியம் நடப்பதில் தாமதம் நிலவும். எதிர்கருத்து உடையவர்களிடம் இருந்து விலகிஇருப்பது நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நிதிவிவகாரங்கள் மற்றும் பணியிடங்களில் யாரோ ஓருவர் தங்களை கட்டுப்படுத்துவதாக நினைப்பீர்கள். மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விசயங்களில் மெத்தனப்போக்கு காட்டுவதால், கருத்து வேறுபாடு தோன்றும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சமுதாயத்தில் இருந்து விலகி இருக்க முற்படுவீர்கள். காலம் பொன் போன்றது என்பதை எத்தருணத்திலும் மறக்கமாட்டீர்கள். நிதானம் காப்பது அவசியம்

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தேவையில்லாத கவலைகள், மனதை வருத்தும் என்பதால் கவனம் அவசியம். ரகசியத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பொழுதுபோக்கு விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பிரச்னையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதால், அது பாதியாக குறையும் என்பதை உணர்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வைகளினால் எடுக்கும் காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற துடிப்பீர்கள். பயணங்களால் புத்துணர்வு பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த பயம் மேலோங்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எதிர்கருத்து கொண்ட மனிதர்களிடம் இருந்து விலகிச்செல்வீர்கள். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மகிழ்ச்சியான நாள். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்தோஷத்தில் திளைப்பீர்கள். யாராலும் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு மகிழ்ச்சி கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

எந்த விசயங்களையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்து செய்வது நன்மைபயக்கும். மனசஞ்சலத்தால் தவிப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள், கடந்தகால தவறுகளிலிருந்து அனுபவம் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களினால் நல்ல செய்தி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிகழ்வுக்கு தக்கவாறு தங்களது திட்டங்களை மாற்றியமைத்து கொள்வீர்கள். யதார்த்தத்தை உணர்வீர்கள். தங்களின் அந்தரங்க விசயங்களில் பிறரின் தலையீட்டை தவிர்ப்பீர்கள்.