தமிழர்கள் ஐரோப்பா நாட்டிற்கு செல்ல ஒரு அருமையான வாய்ப்பு!

Serbia: The Only European Country To Approve Visa-Free Entry For Indians

தமிழர்களுக்கு ஐரோப்பா நாட்டிற்கு செல்ல ஒரு அருமையான, அரிதான வாய்ப்பு அமைந்துள்ளது.

செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு, மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு. இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும், மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

சாதாரண பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் செர்பியா குடியரசு, இந்தியர்கள் மற்றும் ஈரானியர்களுக்கு விசா விலக்கு அறிவித்துள்ளது. இனிமேல், இந்தியர்கள் இந்த தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு விசா இல்லாமல் செல்லலாம்.

ஐரோப்பா நாடான செர்பியா இந்தியாவிற்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திருக்கிறது. இதன் மூலமாக வட இந்தியர்கள் செர்பியாவுக்குள் அதிகம் செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

செர்பியா 2025இல் ஐரோப்பிய யூனியனில் சேரும் வாய்ப்பு உள்ளது. இப்போது செர்பியாவில் குடியேறி ஐந்து வருடம் தங்கினால் செர்பியா குடியுரிமை பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. serbia மற்றும் montenegro இரு நாடுகளும் 2025க்கு முன் சேர வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் தமிழ் உறவுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.