தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும்.

மேலும், தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும், இதில் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றும் கூறுவர்.

சிங்கப்பூரிலும் இந்த தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூர் அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலும் நாம் அறியாத ஒன்றாக இருக்கலாம்.

(Photo: Singapore Philatelic Museum)

தைப்பூசத் திருவிழா அஞ்சல்தலையில் மஞ்சள் வேட்டியுடன் இருக்கும் பக்தர்கள், புடவையுடன் பெண்கள் மேலும் கூடுதலாக காவடி தூக்கி செல்லும் காட்சிகளையும் அதில் காணலாம். இது 1989ல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த அஞ்சல்தலை தொகுப்புடன் நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகியவற்றைக் குறிக்கும் அஞ்சல்தலைகளும் இடம்பெற்றிருந்தன.