சிங்கப்பூரில் MRT இரயில் நிலையங்களில் இந்த நடைபாதை அமைப்பு எதற்காக தெரியுமா..?

Tactile paving system in MRT station

சிங்கப்பூரில் உள்ள MRT இரயில் நிலையங்களில் (மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பது போல்) அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது எதற்காக பயன்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

சிங்கப்பூர் MRT இரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் இதன் பெயர் Tactile Paving அதாவது தொட்டுணரக்கூடிய நடைபாதை ஆகும். இது குறிப்பாக கண் தெரியாதவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் – பினாங்கு இடையே தினசரி விமானங்களை இயக்கவுள்ள எமிரேட்ஸ்..!

இந்த தொட்டுணர்க்கூடிய நடைபாதை ஜப்பானின் ஒகயாமா நகரில் ஒரு தெருவில் இந்த நடைபாதை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பல நாடுகளில் இந்த முறையை பயன்படுத்தபட்டு வருகின்றனர்.

மேலும், கண் தெரியாதவர்கள் நடந்து செல்வதற்கும் மற்றும் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் விதமாகவும் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “வூஹான் வைரஸ்” சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பாதிக்குமா..? அமைச்சர் சான் சுன் சிங் விளக்கம்..!