செயல்பாட்டிற்கு வர இருக்கும் தஞ்சை விமான நிலையம்…!!

Air service to soon from Tanjore

தஞ்சை விமான நிலையம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

தஞ்சாவூரில் கடந்த 1980களில் விமான போக்குவரத்து சேவை நடைமுறையில் இருந்தது. அப்போது தஞ்சை ஒர் சிறிய நகரமாக இருந்ததால் பொதுமக்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டு கால வளர்ச்சியில் தஞ்சை தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது, 11 ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட இந்நகரம், தமிழ்நாட்டின் 7 ஆவது மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது.

இந்நிலையில், தஞ்சை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது, முதற்கட்டமாக தஞ்சை- சென்னை மற்றும் தஞ்சை- பெங்களூரு இடையே விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது ஏர் டிராபிக் பணிகள் முடிவடைந்து விமான முனைய பணிகள் தொடங்கி உள்ளது. இப்பணிகள் முடிந்த உடன் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தஞ்சை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தகவல்: தமிழக ஊடகங்கள்