ஒரு மில்லியன் டாலரை தட்டிச்சென்ற இந்தியர்; நல்வழியில் செலவிட திட்டம்..!

The new million dollar winner

அபுதாபியைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர் துபாய் டூட்டி ஃப்ரீ (DDF) டிராவில் வெற்றியாளராக தேர்வாகியுள்ளார்.

48 வயதான லூயிஸ் ஸ்டீபன் மார்டிஸ் என்பவர் DDF டிராவில் ஒரு மில்லியன் டாலர்களை வென்றுள்ளார். அவரது வெற்றி டிக்கெட்டின் அதிர்ஷ்ட எண் 666 ஆகும்.

லூயிஸ் ஸ்டீபன் கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்.

இந்த வெற்றியானது அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார். மேலும், வெற்றி பெற்ற இந்த பணத்தை நல்வழியில் செலவிட போவதாகவும் கூறினார்.

அபுதாபியில் மார்டிஸ் தனது சொந்த மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வெற்றி பெற்ற பணத்தின் 10 சதவீதத்தை தொண்டு வழங்கவும், மீதம் தன்னுடைய குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

சீரியல் நம்பர் 316-லிருந்து மார்ட்டிஸின் இந்த வெற்றி டிக்கெட் எடுக்கப்பட்டது. அவர் இதை ஆன்லைனில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.