தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் விபத்து; 170 பேர் உயிரிழப்பு..!

Ukrainian plane carrying at least 170 passengers crashes outside Tehran airport killing all on board (AP Photos/Mohammad Nasiri)

பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட குறைந்தது 170 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே (புதன்கிழமை) விபத்துக்குள்ளானது, விமானத்தில் இருந்த அனைவருமே இறந்ததாக ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டதாக அந்த தொலைக்காட்சி அறிக்கை தெரிவித்துள்ளது. இயந்திர சிக்கல்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம், என்று கூறப்படுகிறது.

பின்னர் அரசு தொலைக்காட்சியில், ஈரானிய எமெர்ஜென்ஸி அதிகாரி பிர் ஹொசைன் குலிவந்த், விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் இறந்ததாக கூறினார்.

மேலும், மீட்பு குழு இறந்தவர்களின் உடல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர் என்றார். ஈரானின் அரசு நடத்தும் IRNA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படம், ஒரு வயலில் மீட்பு அதிகாரிகளைக் காட்டுகின்றன, கூடுதலாக அதனுடன் விமானத்தின் பாகங்களும் உள்ளன.

இதை அடுத்து, ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) ஒரு வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்துள்ளது, அது விமானம் இறங்கும்போது தீப்பிடிப்பதைக் காட்டுகிறது.

இருப்பினும், இந்த வீடியோ உறுதிப்படுத்தப்படவில்லை.