உங்களுக்கு பிடித்தமான சிறந்த விமான நிலையம் எது?? வாக்களியுங்கள்..!

Vote for the World's Best Airport

நாம் உலகின் பல பகுதிகளுக்கு சென்றிருப்போம், பல்வேறு நாட்டின் விமான நிலையங்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு பிடித்திருக்கும். அதாவது விமான நிலையத்தின் தோற்றம், அழகு, உபசரிப்பு, பாதுகாப்பு, உணவக வசதி என பல காரணங்கள் கூறலாம்.

அப்படி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பிடித்தமான விமான நிலையத்தை, 2020ஆம் ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்ய நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று வாக்களியுங்கள்.

பின்வரும் கேள்விகள் அதில் இடம் பெற்றிருக்கும்;

  • எந்த விமான நிலையத்தை சிறந்ததாக நீங்கள் கருதுகிறீர்கள்?
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையத்தை ஏன் சிறந்தது என்று மதிப்பிடுகிறீர்கள்?
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையத்தின் உங்கள் வழக்கமான பயன்பாடு என்ன?

மேலும், தேர்வு செய்த விமான நிலையத்தில் நீங்கள் மிகவும் விரும்பியவற்றிற்கு மதிப்பீடு செய்யலாம்.

வாக்களிக்க வேண்டிய இணைய முகவரி: http://www.worldairportsurvey.com/Surveys/favorite_airport.html

கடந்த 2019 ஆம் ஆண்டின் Skytrax கணக்கெடுப்பின் படி, உலகின் சிறந்த 10 விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இதற்காக 2018-2019 உலக விமான நிலைய கணக்கெடுப்பின் போது உலகெங்கிலும் உள்ள விமான வாடிக்கையாளர்களால் பலர் வாக்களித்தனர்.

2019 ஆம் ஆண்டின் சிறந்த 10 விமான நிலையங்களில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.