வூஹான் வைரஸ்: சீனாவின் தற்போதைய நிலவரம் என்ன..?

Wuhan coronavirus death toll rises to 259 in China

Wuhan coronavirus death toll rises to 259 in China : சீனாவில் பரவி வரும் மர்மமான கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 259க்கு அதிகரித்துள்ளது என்று தற்போதைய அதிகாரபூர்வ நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த வைரஸ் தொற்றால் 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வைரஸ் முதலில் பரவிய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் அதிமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சீனாவிலிருந்து திரும்பிய 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு…!

அதன் தினசரி நிலவரப்படி, மாகாண சுகாதார ஆணையம் ஹூபேயில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று வழக்குகள் சீரான வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், அதில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் 1,347 பேர் என்றும், மேலும் அந்நாடு முழுவதும் ஜனவரி 31 வரை 2,102 புதிய வழக்குகள் உள்ளன.

இந்த வைரஸ் பரவுதை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10 நாள்களாக ஹுபெய் மாகாணம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குப் போக்குவரத்து தடையும் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ் குறித்த சிங்கப்பூரின் முன்னெச்சரிக்கை ஆலோசனை காணொளி தமிழில்…!