2020 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி; அணி வாரியாக விடுவிக்கப்பட்ட வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்க் நிர்வாகம் மொத்தம் 5 வீரர்களை விடுவித்துள்ளது, விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி, வேகப்பந்து வீச்சாளர் மோஹிட் சர்மா, துருவ் ஷோரே, சைதன்யா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் போக சென்னை அணியால் ஏலத்தில் ரூ 14.6 கோடியை செலவளிக்க முடியும்.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் உட்பட12 வீரர்களை விடுவித்துள்ளது.

ஷகிப் அல்-ஹசன், யூசுப் பதான், மார்ட்டின் கப்தில், தீபக் ஹூடா, ரிக்கி புய் ஆகியோரை விடுவித்துள்ள ஹைதராபாத் சன்ரைசர்ஸ் நிர்வாகத்தின் இருப்புத்தொகை 17 கோடி ரூபாய் ஆகும்.

நடப்பு சாம்பினான மும்பை இந்தியன்ஸ் அணி இவின் லீவிஸ், ஆடம் மில்னே, ஜாசன் பெரேன்டோர்ப் உட்பட 10 வீரர்களை விடுவித்துள்ளது.அந்த அணியால் ஏலத்தில் 13 கோடி ரூபாய் செலவழிக்க முடியும்.

கிங்ஸ் லெவன் பங்ஞாப் நிர்வாகம் டேவிட் மில்லர், சாம் குர்ரன், ஆன்ட்ரூ டை, மோசஸ் ஹென்ரிக்ஸ், அக்னிவேஷ் அயாச்சி, சிம்ரன்சிங், வருண் சக்ரவர்த்தி ஆகியோரை விடுத்துள்ளது. அந்த அணியின் இருப்புத் தொகை 42 கோடி ஆகும்.

11 வீரர்களை விடுவித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் 35 கோடி செலவு செய்ய இயலும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆஷ்டன் டர்னர், ஒஷானே தாமஸ், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திரிபாதி உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது, வீரர்கள் ஒப்பந்தம், வீரர்களின் விடுவிப்பு நிறைவடைந்துள்ளதால் ரசிகர்களின் ஓட்டுமொத்த கவனமும் அடுத்த மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் பக்கம் திரும்பியுள்ளது.

கிறிஸ் மோரிஸ், காலின் இங்ராம், காலின் முன்ரோ உட்பட 9 வீரர்களை விடுவித்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இருப்புத்தொகை 27 கோடியே 85 லட்சமாகும்.

You cannot copy content of this page