கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விளையாட தடை; 50,000 பவுண்டுகள் அபராதம் – ஏன் தெரியுமா?

Cristiano Ronaldo banned two matches

ரசிகர் ஒருவரின் கையில் இருந்த மொபைல் போனை தட்டிவிட்டதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்பந்து சங்கத்தால் 50,000 பவுண்டுகள் அபராதமும் ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மீண்டும் Christmas Wonderland: டிச.2 முதல் ஜனவரி 1, 2023 வரை… தயாரா இருங்க

கடந்த ஏப்ரல் மாதம், கூடிசன் பார்க்கில் எவர்டனுக்கு எதிரான போட்டியின் பின்னர், ரசிகரின் கைபேசியை தரையில் தட்டி விட்டார் ரொனால்டோ.

அப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடிய ரொனால்டோ மீது ‘முறையற்ற மற்றும்/அல்லது வன்முறை நடத்தை’ குற்றம் சாட்டப்பட்டது.

இந்த தடை கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொனால்டோ இப்போது எந்தக் குழுவிலும் இல்லை என்பது கூடுதல் செய்தி.

முதல் “பஸ்-ஸ்டாப் ஜிம்”… காத்திருக்கும் நேரத்தை இனி வீணடிக்க வேண்டாம்.. ஒர்க் அவுட் செய்து ரீசார்ஜ் பெறுங்கள்!