விளையாட்டு செய்திகள்

47 ஆண்டுகளுக்கு பின் டிரா ஆன ஆஷஸ் டெஸ்ட்; கோப்பையை தக்கவைத்தது ஆஸ்திரேலிய அணி!!

Australia wins the Ashes series!

5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆஸ்திரேலிய அணியை 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை சமன் செய்தது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் கடந்த 1972-ம் ஆண்டுக்குப்பின், ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2சமனில் முடிந்துள்ளது. கடந்த 1972-ம் ஆண்டிலும் 2-2 என்ற கணக்கில்தான் சமனில் தொடர் முடிந்தது.399 ரன்கள் இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஷஸ் டெஸ்ட் தொடரும் அடங்கும். இந்த தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 வெற்றிகள் பெற்றதையடுத்து, தலா 48 புள்ளிகளும், ஒரு போட்டி சமனில் முடிந்ததால் தலா 8 புள்ளிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் 56 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

இருப்பினும், கடந்த ஆஷஸ் தொடரின் சாம்பியன் ஆஸ்திரேலிய அணி என்பதால், கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த தொடரில் தொடர் நாயகன்களான இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts