சிங்கப்பூர் அமைச்சர் கணிப்பது நடக்குமா? 2034 மிஷன் என்ன தெரியுமா?

singapore foot ball team
singapore foot ball team

சிங்கப்பூர் தேசிய கால்பந்து அணிக்கு ‘Tiger Beer’ நிறுவனம் புதிய ஸ்பான்சர் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய கோ சோக் டோங், 2010 கால்பந்து உலகக் கோப்பையில் சிங்கப்பூர் அணியை தகுதிப் பெறச் செய்த முயற்சிகள் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

‘கோல் 2010’ எனும் அந்த திட்டத்தில், உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சவுதியிடம் சிங்கப்பூர் தோல்வியடைய, கோல் 2010 திட்டம் நீர்த்துப் போனது,

இந்த வருடம் அந்த திட்டம் புதுப்பிக்கப்படுகிறது. 2034 உலகக் கோப்பையில் நிச்சயம் சிங்கப்பூர் முன்னேறும் என் நாட்டின் சுகாதார மற்றும் சட்ட அமைச்சரும், சிங்கப்பூர் கால்பந்து கூட்டமைப்பின் Vice President எட்வின் டோங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘2034 உலகக் கோப்பைக்கு சிங்கப்பூர் தகுதிப் பெறப் போகிறது என்பது “நிதர்சன உண்மை”. ஏனெனில், 2034க்கு இன்னும் 15 வருடங்கள் உள்ளது. நமது பயிற்சிக்கு நிறைய காலம் உள்ளது.

உலகக் கோப்பைக்குள் நுழைவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஆசியாவின் மாபெரும் சக்திகளாக விளங்கும் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இருக்கும் போது உலகக் கோப்பைக்குள் நுழைவது கடினமே. ஆனாலும், அதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.