இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டி20; இந்திய அணி அறிவிப்பு – தோனி, பும்ரா இல்லை!

Indian team selection in upcoming SA T20

இந்தியா – தென் ஆப்பிரிக்கா மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் செப்டம்பர் 15ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அணியில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

15 வீரர்கள் கொண்ட பட்டியலில் தோனி, ஜஸ்பிரித் பும்ரா பெயரும் இடம்பெறவில்லை. அணியில் கலீல் அகமெட், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதே போல் ஸ்பின் பவுலிங்கில் ஜடேஜா, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், லெக் பிரேக் பவுலர் ராகுல் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் கிடைத்துள்ளது.

தரம்சலாவில் செப்15-ல் முதல் போட்டி, செப்.18 மற்றும் 22ம் தேதிகளில் மற்ற இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குருணால், வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமெட், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.