இந்தியா vs வங்கதேசம் 2வது டி20 போட்டியை சிங்கப்பூரில் பார்ப்பது எப்படி?

ind vs ban 2nd t20 when and where to watch in singapore
ind vs ban 2nd t20 when and where to watch in singapore

India vs Bangladesh 2nd T20 Live Streaming: இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

2016 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் டி20 வெற்றி சதவிகிதம் 63.83 என்று உள்ளது. இருப்பினும், இந்தியா டெஸ்ட் போட்டிகளில் அசத்துவது போல, டி20 களங்களில் முழுமையாக டாமினேட் செய்வது கிடையாது. இந்தியா டி20 தொடர்களில் வெற்றிப் பெறுவது போல் தெரிந்தாலும், அந்த ‘டாமினேஷன்’ என்பது மிஸ் ஆகிக் கொண்டே இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரியும்.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், தமீம் இக்பால் இல்லாவிட்டாலும் பலம் பொருந்திய அணியாகவே அச்சுறுத்துகிறது. கணிக்க முடியாத சவுமியா சர்கர், லிட்டன் தாஸ், ‘ஆல் டைம் ஃபார்ம்’ பிளேயர் முஷ்பிகுர் ரஹீம், அச்சுறுத்தும் மஹ்மதுல்லா என்று பேட்டிங் வலிமையாக உள்ளது.

டெல்லியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்திய அணியை வீழ்த்தி, இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டி20 வெற்றியை பதிவு செய்தது.

மஹா புயலால் இன்றைய ஆட்டம் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி நடைபெறாமல் போனால், இந்தியாவுக்கு தான் நெருக்கடி மேலும் அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில், சிங்கப்பூர் நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

Star Hub Channel No : 236, 237

Singtel Channel No. : 123, 124

சிங்கப்பூரில் கீழே குறிப்பிட்டுள்ள டிவி சேனலில் இந்த ஆட்டத்தை பார்க்கலாம்.