தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து தடுமாற்றம்; வெற்றி யாருக்கு ??

IndvsSa 1st test match

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதி நாள் ஆட்டம் தொடங்கிய முதலே தடுமாற்றம்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 7 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரோகித் சர்மாவும், புஜாராவும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். முதல் இன்னிங்சில் 6 சிக்சர்களோடு, 2வது இன்னிங்சில் 7 சிக்சர்கள் அடித்ததன் மூலம், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

புஜாரா 81 ரன்களிலும், ஜடேஜா 40 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது.

இதனை தொடர்ந்து, 395 ரன்கள் வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எல்கார் 2 ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து, ஐந்தாம் நாள் ஆட்ட தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டை இழந்து 30 ரன்களை எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்.

இவர் 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.