இரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்; தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்..!

India vs SA 1st Test Match

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும், ரோகித் சர்மா 115 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதை தொடர்ந்து இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் சதம் அடித்தார். அவர் 206 பந்துபகளில் 2 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ரோகித் ஷர்மா 176 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் இறங்கிய கோலி 20 ரன்கள் எடுத்து அவுட் ஆகிய வெளியேறினார். இதனிடையே தொடர்ந்து நிதானமாக விளையாடிய மயங்க் அவர்வால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் 371 பந்துகளில் 23 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 215 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த 502 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. எய்டன் மார்க்ரம் 5 ரன்களுக்கும், டி பிரயின் 4 ரன்களுக்கும் மற்றும் டேன் ஃபியட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ரவி அஸ்வின் 2 விக்கெட்டையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்க அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.