விளையாட்டு செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டையும் விட்டு வைக்காத ரோஹித்; ரஹானே அபாரம்..!!

INDvsSA test cricket: Rohit slashed double century

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், சிறப்பாக ஆடி வந்த ரஹானேவும் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 11வது சதத்தை அவர் நிறைவு செய்தார். சிறப்பாக விளையாடி வந்த வந்த ரோகித் சர்மா, சிக்சர் விளாசி டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 249 பந்துகளில் 28 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் தனது இரட்டைச்சதத்தை நிறைவு செய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் இரட்டை சதம் இதுவாகும். எனினும் சிறிதுநேரத்தில் 212 ரன்களில் தனது விக்கெட்டை ரோகித் சர்மா பறிகொடுத்தார்.

தற்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. சஹா மற்றும் ஜடேஜா காலத்தில் உள்ளனர்.

Related posts