சிங்கப்பூரில் குத்துச்சண்டையின்போது உயிரிழந்த இந்திய வம்சாவளி ஆணழகன் பிரதீப் குறித்த அறிக்கை..!

Muay Thai fight death
Muay Thai fight death: Pradip Subramanian died of natural cause, coroner rules (Photo: Asia Fighting Championship)

சிங்கப்பூரில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற யூடியூபர் ஸ்டீவன் லிமுக்கு எதிரான பிரபல மியூ தாய் (Muay Thai) குத்துச்சண்டை போட்டியின் பின்னர் இறந்த இந்திய வீரர் பிரதீப் இயற்கையான முறையில் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

முன்னாள் உலக உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் சிங்கப்பூர் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவரான திரு பிரதீப் சுப்பிரமணியம் (32) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சோதனை; பெண் கைது..!

கடந்த செப்டம்பர் 23, 2017 அன்று மெரினா பே சாண்ட்ஸில் நடந்த பிரபல குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது ஸ்டீவன் லிம் (41) என்பவரை எதிர்கொண்டார்.

லிம் விட்ட குத்தில் சரிந்து விழுந்து பிரதீப் சுப்பிரமணியன் இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதே இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

பிரதீப் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி கமலா பொன்னம்பலம் தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குத்துச்சண்டை நடப்பதற்கு முன்னதாக களத்தில் இருந்த டாக்டர், வீரர் பிரதீப்புக்கு சோதனை நடத்தி தகுதி சான்றளித்தார். அதையடுத்தே பிரதீப் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார்.

அப்போது அவரது உடல்நிலை நன்றாக இருந்துள்ளது. லிம்முடன் நடந்த மோதலின்போது பிரதீப் மூன்று குத்துக்களை எதிர்கொண்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த பிரதீப் பின்னர் மெதுவாக எழுந்தார்.

இதையும் படிங்க : மாணவிக்கு தொல்லை; சிங்கப்பூரில் பணிபுரிந்தவரை மாஸ்டர் பிளான் போட்டு கைது செய்த போலீஸ்..!

பின்னர் இரு வீரர்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது பதக்கத்தை பெற்றுக்கொண்ட பிரதீப் திடீரென மூலையில் சரிந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அன்றிரவு இரவு 9.51 மணிக்கு இறந்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் பிரதீப் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. அவரது இறப்பு இயற்கையான ஒன்றுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.