FIFA உலகக் கோப்பை: முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த Host நாடு என்ற வரலாற்றில் இடம்பெற்ற கத்தார்

qatar-loses-to-ecuador-world-cup
FIFA World Cup/Twitter

FIFA உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி இன்று நவம்பர் 21, திங்கட்கிழமை (சிங்கப்பூர் நேரப்படி) தொடங்கியது.

முதல் போட்டி அல் பைட் மைதானத்தில் சுமார் 67,000 பார்வையாளர்கள் முன்னிலையில் உலகக்கோப்பை போட்டிகளை ஏற்று நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்தது.

பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் ஈக்வடாரிடம் 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் தோல்வியை சந்தித்தது.

வரலாற்றில் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த போட்டிகளை ஏற்று நடத்தும் முதல் host நாடு என்ற இடத்தை கத்தார் பெற்றுள்ளது.

உலகக் கோப்பையில் கத்தார் விளையாடுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.