சர்வதேச கிரிக்கெட்டில் முதல் டி20 வெற்றி – புதிய சரித்திரம் எழுதிய சிங்கப்பூர்

சிங்கப்பூர், ஜிம்பாப்வே, நேபாளம் அணிகளுக்கு இடையிலான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இதில் சிங்கப்பூர் – ஜிம்பாப்வே அணிகள் இடையேயான ஆட்டத்தில், மழை காரணமாக ஆட்டம் 18 ஓவர்களாக குறைப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சிங்கப்பூர் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. டேவிட் 41, மன்ப்ரீத் சிங் 41, ரோஹன் 39 ரன்களை விளாசினர்.

பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் சிங்கப்பூர் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் வெற்றியை சிங்கப்பூர் பதிவு செய்தது.

ஐசிசியின் முழு உறுப்பினர் நாடான ஜிம்பாப்வேயை, 1974ம் ஆண்டு இணை உறுப்பினரான சிங்கப்பூர் கிரிக்கெட் அணி வீழ்த்தி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

You cannot copy content of this page