விளையாட்டு செய்திகள்

சிங்கப்பூர் வரலாற்று சாதனை; ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை குளோபல் குவாலிபயர் தகுதியை பெற்றது.!

Singapore creates history, qualifies for ICC T20 World Cup Global Qualifier

ஐசிசி நடத்தும் ஆசிய மண்டலத்துக்கான 20 ஓவர் போட்டிகளின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் கோலாலம்பூரில் நடைபெற்று வருகின்றன.

இந்த தகுதிப் போட்டியில் ‘ஏ’ பிரிவு ஆட்டங்கள் நிறைவடைந்தன. அதை தொடர்ந்து ‘பி’ பிரிவு ஆட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

‘பி’ பிரிவில் இடம்பெற்ற மலேசியா, பூடான், தாய்லாந்து, சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றன. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ஐ.சி.சி டி20 ஆசிய இறுதி தகுதிச் சுற்றில் மோதும்.

நேபாளம், கத்தார், குவைத் மற்றும் மலேசியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் ஐ.சி.சி டி20 தகுதிப் போட்டியில் வென்றதைக் கண்டு வியப்படைந்ததாக சேதன் சூர்யவன்ஷி குறிப்பிட்டு இருந்தார்.

இது தனக்கு 15 வருட பயணம் என்றும், தன் வாழ்க்கையின் நம்பமுடியாத அத்தியாயம் என்றும், தாம் மிகவும் பெருமிதம் கொள்ளவதாகவும், அணியில் சில சாதனைகளில் மீண்டும் தாம் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிங்கப்பூர் கிரிக்கெட் அணி முதன்முறையாக ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை உலகளாவிய தகுதி சுற்றுக்கு தகுதி பெற்று வரலாற்றை உருவாக்கியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற ஒரு படி மேலே வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதி இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் நேபாளத்தை வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த சிங்கப்பூர் 20 ஓவர்களில் 191/6 என்ற பிரமாண்டத்தை எட்டியது. ஒரு ஓவருக்கு 9.55 ரன் விகிதம் பெற்றது. டிம் டேவிட் (43 பந்துகளில் 77), ரோஹன் ரங்கராஜன் (33 பந்துகளில் 49), மன்பிரீத் சிங் (27 பந்துகளில் 42) ஆகியோர் சிங்கப்பூரின் முக்கிய வீரர்களாக இருந்தனர்.

பதிலுக்கு நேபாளம் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. செல்லடோர் விஜயகுமார் தனது 4 ஓவர்களில் 4/25 மற்றும் வினோத் பாஸ்கரன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சிங்கப்பூர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சேதன் சூர்யவன்ஷி இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார், “இந்த போட்டிக்கு சிங்கப்பூர் தகுதி பெறுவது இதுவே முதல் முறை. நாங்கள் கடந்த 14 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். சிங்கப்பூர் கிரிக்கெட்டுக்கு இது நிச்சயமாக மிகப்பெரிய சாதனை என்று கூறினார்”.

கடந்த 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் முதல் 3 சாதனைகள்?

1 . சிங்கப்பூர், ஐ.சி.சி உலக தரவரிசையில் 58 வது இடத்திலிருந்து 23 ஆக முன்னேறியுள்ளது.

2. T20 உலகக் கோப்பையில் தகுதி பெற்றுள்ளது.

3. ஆப்கானிஸ்தான், கனடா, கென்யா மற்றும் நேபாளம் போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக சிங்கப்பூர் வெற்றி பெற்றுள்ளது.

Related posts