தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரானிய அணி! – என்ன நடந்தது?

iran_players_wc;pc-afp
கத்தாரில் நவம்பர் 21 அன்று நடந்த முதல் உலகக் கோப்பைக் காற்பந்து போட்டியில்,ஈரானிய தேசிய அணி விளையாட்டிற்கு முன்னதாக ஈரானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமைதியாக இருந்தது.
கத்தாரில் உள்ள Khalifa Interaction மைதானத்தில் காற்பந்து தொடங்குவதற்கு முன்பு 11 தொடக்க வீரர்களும் அவர்களது தேசிய கீதத்தைப் பாடாமல் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.கடந்த செப்படம்பர் மாதம் போலீசாரின் காவலில் இருந்த 22 வயதான மஹ்சா அமினி என்ற பெண் மரணமடைந்தார்.
இதனையடுத்து ஈரான் முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.காற்பந்து ரசிகர்கள் பலரும் விளையாட்டு வீரர்களின் செயலுக்கு “பெண் சுதந்திரம்” என்ற பலகைகளை ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.சிலர் கேலி செய்தனர்.தேசிய கீதத்தின் போது ஈரானிய அரசு தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பை நிறுத்தி யது.

சில ரசிகர்கள் வீட்டிற்கு திரும்பினர்.அணியின் கேப்டன் போட்டிக்கு முதல் நாள் ஈரானின் நிலைமை குறித்துப் பேசினார். “நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம். நாங்கள் அவர்களுக்கு அனுதாபப்படுகிறோம்” என்று கூறினார்.