சிங்கப்பூரர் தயாரிப்பில் ப்ளூவேல் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா !

Blue Whale Movie Audio Launch Function.!

சிங்கப்பூர் அருமைச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் உருவான ப்ளூவேல் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பிரபல மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்தப்படத்தின் முக்கியத்துவம் குறித்தும், இதனால் இளைஞர்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வையும் விளக்கி கூறினார்.

மனநல மருத்துவர் ஃபஜிலா ஆசாத் இப்படம் பற்றி கூறுகையில், சமூக நலன் கருதி பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் தான் சிறந்த படமாக கருதுகிறேன். பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த விஷயங்களில் கவனத்தை வைக்க வேண்டும் என்பதில் தான் குழப்பமடைகிறார்கள். எல்லா விளையாட்டுக்களும் தவறானது இல்லை. ஆனால், சவுண்ட் சிஸ்டம் தான் நரம்பைப் பாதித்து அடிமையாக்குகிறது. இந்த விளையாட்டின் பாதிப்புக்கு முக்கிய காரணம் சவுண்ட் சிஸ்டம் தான். ஒரு குறிப்பிட்ட இசையைக் கேட்க கேட்க அது மூளை நரம்பைப் பாதித்து அந்த இசையை மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அதன்காரணமாக புளூவேல் மாதிரி ஆபத்தான விளையாட்டை மீண்டும் மீண்டும் விளையாடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல், உணவு முறைகளும் இதற்கு துணைபுரிகிறது, என்றார்.

காணொளி: