சைனாடவுனில் ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அதன் தொடர்பில் மேலும் 9 பேர் கைது..!

9 more people arrested for armed brawl in Chinatown
9 more people arrested for armed brawl in Chinatown (PHOTO: SINGAPORE POLICE FORCE)

சைனாடவுனில் ஆயுதங்களுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அதன் தொடர்பில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

People’s Park சென்டரில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, 18 – 28 வயதுக்கு இடைப்பட்ட 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (மே 12) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அதிக எண்ணிக்கையாக ஒரே நாளில் 626 பேர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!

இந்த சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, அந்த இடத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பெண் தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபாரதங்கள் விதிக்கப்படலாம்.

சட்டவிரோத கூட்டம் தொடர்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்வர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் துவாஸ் கிடங்கில் தீ; சுவர்கள் இடிந்து விழுந்து நாசம்..!