பாலத்தில் அமர்ந்து முத்தமிட்ட காதல் ஜோடி தவறி விழுந்து பலி! – பதைபதைக்க வைக்கும் வீடியோ

Couple suffers fatal fall while kissing on bridge in peru
Couple suffers fatal fall while kissing on bridge in peru

தென் அமெரிக்க நாடான பெருவைச் சேர்ந்த காதல் ஜோடி ஹெக்டோர் விடால் – மேத் எஸ்பினாஸ். மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இருவரும், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை, கஸ்கோ நகரில் பெத்தலேம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேத் எஸ்பினாஸ் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியின் மீது ஏறி அமர்ந்தார். தரையில் நின்ற தனது காதலன் ஹெக்டோர் விடாலின் இடுப்பில் கால்களை பின்னியபடி அவருடன் பேசி கொண்டே அவரை முத்தமிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக காதலர்கள் இருவரும் நிலைதடுமாறி பாலத்தில் இருந்து குப்புற கீழே விழுந்தனர்.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மேத் எஸ்பினாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் காதலன் ஹெக்டோர் விடால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சி சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.