சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவையொட்டி கண்கவர் பாரம்பரிய தமிழ்க் கலை நிகழ்ச்சிகள்..!

Pongal Festival Street Light-up at Little India in Singapore

சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது, குறிப்பாக லிட்டில் இந்தியா வண்ண விளக்குகளால் வண்ணமயமாய் காட்சியளிக்கிறது.

லிட்டில் இந்தியாவில் பொங்கல் திருநாள் ஒளியூட்டு விழாவை அமைச்சர் இந்திராணி ராஜா, LISHA உடன் இணைந்து கடந்த ஜனவரி 10 அன்று மாலை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பொங்கல் கொண்டாட்டம்; பொங்கலுக்கான சிறந்த நேரம் எவை?

சிங்கப்பூரில் பொங்கல் பல ஆண்டுகளாக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. லிட்டில் இந்தியாவில், கடந்த ஆண்டு 800,000க்கும் அதிகமான மக்கள் பொங்கலுக்காக வருகை தந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, பொங்கல் வைத்தல், உறியடி, மண்பாண்டங்கள் தயாரித்தல், பாரம்பரிய இந்திய நடனங்கள் போன்ற பலவிதமான கலாச்சார நிகழ்வுகள் அனுபவிக்க லிட்டில் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படத்தின் தலைப்பு..!

மேலும், இந்த பொங்கல் திருவிழாவையொட்டி கண்கவர் பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிராங்கூன் சாலை முழுவதும் வண்ண விளக்கு அலங்காரத்துடன் மின்னொளியில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி ஆகியவற்றுக்கு இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா அவர்கள் இந்த விழாவில் பிரபல முஸ்தபா பேரங்காடி நிறுவன குழுமங்களின் அதிபர் முஸ்தாக் அகமது அவர்களுக்கு, நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றியதற்காக நினைவு பரிசை வழங்கி கௌரவப்படுத்தினார்.