சிங்கப்பூரில் உங்களுடைய பாஸ்போர்ட்டை தொலைத்தால் என்ன செய்ய வேண்டும்??

(Photo: gocrowdera)

சிங்கப்பூரில் வசிப்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட்டை தொலைத்தால் என்ன செய்ய வேண்டும், என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். இது அதிகமானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான்.

முதலில் நாம் செய்யவேண்டியது என்ன?

பாஸ்போர்ட்டை தொலைத்தவர் முதலில் அருகாமையில் உள்ள காவல்துறையை அணுகி தொலைந்துபோன இடத்தை கூறி புகார் மனுவை அளிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவராக, BLS INTERNATIONAL CENTER-க்கு சென்று பாஸ்போர்ட்டை தொலைத்தவர் கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • போலீசாரிடம் புகார் செய்த மனு நகல்.
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மூன்று.
  • சிங்கப்பூர் WORK PERMIT CARD (S-PASS, E-PASS, WORK PERMIT) இவைகளில் ஏதேனும் ஒன்றின் அசல்.
  • இவைகளுடன் தொலைந்துபோன பாஸ்போர்ட் நகல் இருந்தால் அதையும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த விண்ணப்பத்திற்கு சேவைக் கட்டணம் தோராயமாக 200 வெள்ளியில் இருந்து வசூலிக்கப்படலாம்.

மேற்கண்ட ஆவணங்களை விண்ணப்பித்த பிறகு 8-15 நாட்களில் நீங்கள் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு : https://www.blsindia.sg/