தமக்கு சிறந்த பணிப்பெண் வேண்டும் என்றும், அவருக்கு மாத சம்பளமாக சுமார் S$27000 வரை வழங்கப்படும் என்றும் பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்தது பேசும்பொருளாக மாறியுள்ளது.

இந்திய மதிப்பீட்டின் படி சம்பளம் 16 லட்சத்துக்கும் அதிகம் என்பது தான் பலரின் வியப்பு.

இவ்ளோ பணம் கொடுக்கும் முதலாளி, கண்டிப்பாக சில கண்டிஷன்களும் வைத்திருப்பார் என்பது நமக்கே தெரியும். பணிப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதாவது அடக்கஒடுக்கமாக இருக்க வேண்டுமாம், இதான் முதல் கண்டிஷன். அதே போல பழங்கால ராணிகளுக்கு வேலை செய்வது போல பணிபுரிய வேண்டுமாம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான Work pass விதிகள் – தவறிழைக்கும் ஊழியர்களுக்கான எச்சரிக்கை

முதலாளிக்கு உடை மாற்றிவிடுவது, அலங்கரிப்பது போன்ற தன்மானம் குறைவான வேலைகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பெண் உயரம் 165 சென்டிமீட்டர், எடை 55 க்கு குறைவாக இருக்க வேண்டுமாம். அதே படிப்பு உயர்நிலை கல்வி தகுதிக்கு கூடுதலாக இருக்க வேண்டுமாம்.

விளம்பரம் மூலமாக ஏற்கனவே இருவர் வேலைக்கு சேர்ந்து S$26000 வரை சம்பளம் பெறுகின்றனர். இந்த வேலைக்கு பலர் போட்டிபோட்டுக்கொண்டு விண்ணப்பம் அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.

போஸ்ட் செய்த பெண் சீனாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஷாங்காய் நகரில் வசித்து வருகிறார்.

ரயில்களில் கீழ்த்தரமாக நடக்கும் நபர்கள்… பெண் பயணிகள் தான் அவர்கள் டார்கெட் – போட்டோ வெளியிட்டு எச்சரிக்கை