தரவுகள், போட்டோக்கள் நீக்கப்படலாம் – Google கணக்கு உடையோருக்கு எச்சரிக்கை

google-deleting-accounts
Unsplash

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது sign in செய்யப்படாமல் இருக்கும் அனைத்து கூகுள் (Google) கணக்குகளையும் நீக்கம் செய்யவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

நீக்கம் செய்யும் இந்த நடவடிக்கை டிசம்பரில் இருந்து தொடங்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

தொற்றுக்காலத்தின்போது கஷ்டப்பட்ட, சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களுக்கு 8 மாதம் வரை போனஸ் – SIA அதிரடி

கணக்கை நீக்குவதுடன் மட்டுமல்லாமல் Gmail, Google Docs மற்றும் Google Drive போன்ற Google பணியிடத்தில் உள்ள சேமிப்பு உள்ளடக்கமும், மேலும் YouTube மற்றும் Google Photos இல் சேமிக்கப்பட்ட தகவல்களும் நீக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மோசடிகள், குறுஞ்செய்தி மோசடிகள் மற்றும் கணக்குகளை ஊடுருவி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அபாயத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தனிப்பட்டவர்களின் Google கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும், பள்ளிகள் மற்றும் வணிகங்கள் போன்ற அமைப்புகளின் Google கணக்குகளைப் பாதிக்காது.

வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் இது குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம்