சிங்கப்பூரில் ஓட்டுநர் உரிமம், வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்ற விரும்புவோருக்கு முக்கிய அப்டேட்

ஓட்டுநர் உரிம

சிங்கப்பூரில் சில ஓட்டுநர் உரிமச் சேவைகளுக்காக இனி நேரில் செல்ல முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் மே 13 ஆம் தேதி முதல் சில ஓட்டுநர் உரிமச் சேவைகளை நேரில் நாம் பெற முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சேவைகளில், ஓட்டுநர் உரிமம் சார்ந்த விவரங்களை மாற்றுவது அல்லது வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்றுவது ஆகியவையும் அடங்கும்.

ஓட்டுநர் உரிமத்தில் புகைப்படத்தை மாற்றவோ அல்லது குடியுரிமை நிலையைப் புதுப்பிக்கவோ விரும்புவோருக்கு இனி ஆன்லைன் முன்பதிவு சேவையை போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்துகிறது.

இனி ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள, ரத்துசெய்ய அல்லது மாற்ற முன்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும்.

சிங்கப்பூர் காவல்துறை இணையதளத்தில் உள்ள e-Services பக்கத்தின் மூலம் முன்பதிவுகளை செய்யலாம்.

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை சிங்கப்பூரில் மாற்றும் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் படிவத்தையும் அதில் பெற்றுக்கொள்ளலாம்.

இணைய வழியாக பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஆறு வாரங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் முடிவுகள் வழங்கப்படும்.

“ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்”