உட்லண்ட்ஸில் பேருந்து மரத்தில் மோதி விபத்து.. ஒருவர் மரணம்

உட்லண்ட்ஸில்
sgfollowsall.backup on Instagram

உட்லண்ட்ஸில் உள்ள மரத்தில் பேருந்து மோதிய சம்பவத்தில் 58 வயதான ஓட்டுநர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை (ஏப். 16) காலை நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

விபத்து நடந்தபோது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவை எண் 911, உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் இருந்து உட்லண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து நடுவத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது மரத்தில் மோதியதாக SMRT பேருந்துகளின் துணை நிர்வாக இயக்குநர் வின்சென்ட் கே தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து நேற்று காலை 9.25 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஓட்டுநர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.

விசாரணை நடந்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம்.. விளையாட்டு வசதிகள், திரையரங்குகளுடன்..