வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சண்டை: மரப்பலகையால் தாக்கியதில் ஒருவர் மரணம் – சந்தேக நபர் கைது

Google Maps

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 37 வயது ஆடவரின் மரணத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 26 வயது ஆடவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று (ஜனவரி 1) நள்ளிரவு 1:25 மணியளவில் உட்லண்ட்ஸ் இண்டஸ்ட்ரியல் பார்க்கில் உள்ள தங்கும் விடுதியில் சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்

சிகிச்சை பலனின்றி மரணம்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஆடவர் ஒருவர் தலையில் காயங்களுடன் கீழே அசையாமல் கிடப்பதைக் கண்டனர்.

பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சுயநினைவின்றி இருந்ததாகவும், அதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சண்டை

முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாகவும், மேலும் 26 வயது ஆடவர், மற்றொருவரை திருகுகள் கொண்ட மரப்பலகையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 26 வயது ஆடவர் மீது இன்று ஜனவரி 2ஆம் தேதி, ஆபத்தான ஆயுதம் கொண்டு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும்.

தண்டனை என்ன?

இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

பிப். 1, 2022 முதல் புதிய Work pass அனுமதி ஒப்புதலுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்