சிங்கப்பூர் 4D லாட்டரி.. 3 குலுக்கலுக்கு விற்றுத் தீர்ந்த 1505 என்ற எண்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

சிங்கப்பூர் 4D லாட்டரி

சிங்கப்பூர் 4D லாட்டரி டிக்கெட் வங்கியோர் 1505 என்ற எண்ணை அதிக அளவில் வாங்கியதால் ஏப். 17 புதன்கிழமை நடைபெறவிருக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

அதோடு மட்டுமல்லாமல், ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 ஆகிய தேதிகளுக்கான 1505 என்ற 4D எண்களும் விற்றுத் தீர்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸில் பேருந்து மரத்தில் மோதி விபத்து.. ஒருவர் மரணம்

ஏன் அந்த குறிப்பிட்ட எண் மட்டும் இப்படி அதிக அளவில் வாங்கப்பட்டது என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.

அடுத்த மாதம் 15 ஆம் தேதி பிரதமர் லீ சியன் லூங் தனது பிரதமர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாகவும், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பதவியை ஏற்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4Dsoldout

இது குறித்து ஏப்., 15ல் அன்று வெளியான அறிக்கையில், திரு.வோங் மே மாதம் 15 ஆம் தேதி இரவு 8:00 மணிக்கு இஸ்தானாவில் பதவியேற்பார் என பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில், “0515” என்ற எண் மட்டும் அதிக அளவில் விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

4D லாட்டரியை பொறுத்தவரை, ஒரே எண் குறிப்பிட்ட அளவுக்கு மேல் விற்கப்பட மாட்டாது. வரம்பை எட்டியதும் அந்த எண் நிறுத்தப்பட்டுவிடும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம்.. விளையாட்டு வசதிகள், திரையரங்குகளுடன்..