லாரி மோதிய விபத்தில் 26 வயது ஆடவர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் pie-kje-accident-motorcycle-death
Telegram

பான் தீவு விரைவுச் சாலையில் (PIE) லாரி மோதிய விபத்தில் 26 வயது ஆடவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து நேற்று ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 10:15 மணியளவில் தகவல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் வேலை.. பிராட்டா மாஸ்டர் தேவை – உணவு, தங்குமிடம் இலவசம்

கிரான்ஜி எக்ஸ்பிரஸ்வேயை (KJE) நோக்கி செல்லும் வழியில் ஜலான் பஹார் வெளியேறிய பின்னர் இந்த விபத்து நடந்தது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் உறுதி செய்து அறிவித்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.