இரவிலும் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகள்.. இடையூறாக இருப்பதாக புகார் சொல்லும் குடியிருப்பாளர்கள்

இரவிலும் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகள்
Photo: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் இரவிலும் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகள் இடையூறாக இருப்பதாக சில குடியிருப்பாளர்கள் குறை கூறியுள்ளனர்.

ஹௌகாங்கில் இரவு நேரத்திலும் கிராஸ் ஐலேண்ட் லேன் ரயில் பாதைகான கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கட்டுமான வேலையிடத்தில் இருந்து இரைச்சல் எழுவதாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் புகார் கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்புகளை கருத்தில் கொண்டு சில வேளைகளில் இரவு நேரங்களில் வேலை தொடர்வதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் மட்டும், பிளாக் 513 ஹௌகாங் அவென்யூ 10இல் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து எட்டு புகார்கள் கிடைத்துள்ளதாக ஆணையம் கூறியது.

இதில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் அருகிலுள்ள உள்கட்டமைப்பு அல்லது கட்டிடத்திற்கு சேதம் ஏற்ப்படக்கூடும் எனவும் அது சொன்னது.

பாதுகாப்பு அபாயங்கள் இல்லாத பிற கட்டுமான நடவடிக்கைகள் இரவு 10 மணிக்குள் முடிவடையும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. மீறினால் கடும் தண்டனை