வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம்.. விளையாட்டு வசதிகள், திரையரங்குகளுடன்..

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூர்: செம்பவாங்கில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை அவ்வப்போது அறிவித்து அதனை செயல்படுத்தியும் வரும்.

இந்த பொழுதுபோக்கு நிலையத்தை அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் அமைப்புகள் நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்த புதிய பொழுதுபோக்கு நிலையத்தில் விளையாட்டு வசதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் உள்ளன.

அதோடு மட்டுமல்லாமல், நம் உடல்நிலையை பரிசோதித்து கொள்ளவும் அங்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையான சூழலில் சுத்தமான காற்றோட்டத்தில் ஊழியர்கள் இளைப்பாற இவ்விடம் சிறந்த ஒன்றாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் சமூக நலனை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல் இது என மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார்.

இது பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்..

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர்.. அனுமதித்த முதலாளிகளுக்கு செக்