“ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்”

சிங்கப்பூரில் ஊழியர்கள் எவ்வளவு மணிநேரங்கள் வேலை
Photo: TODAY

சிங்கப்பூரில் ஊழியர்கள் எவ்வளவு மணிநேரங்கள் வேலை செய்கின்றனர் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் ஊழியர்கள் செய்த வேலை திறனை முதலாளிகள் மதிப்பிடுமாறு ஊழியரணி வலியுறுத்தியுள்ளது.

இதனால் நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகள் (flexible work arrangements) பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிய முத்தரப்பு வழிகாட்டுதல்கள் வரும் டிசம்பரில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளன.

இந்த நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை அனைத்து முதலாளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலை ஏற்பாடுகள் வெற்றிபெற, பணியிடத்தில் நம்பிக்கை கலாச்சாரம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும், மேலும் இந்த ஏற்பாடுகள் நிறுவனத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

நிறுவனங்கள் தங்கள் மனிதவளம் சார்ந்த நடைமுறைகளை மேம்படுத்திக்கொள்ள உதவிகள் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

அவ்வாறான உதவிகள், இந்த நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை சிறப்பாக செய்துகொடுக்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இரவிலும் தொடர்ந்து நடக்கும் கட்டுமான பணிகள்.. இடையூறாக இருப்பதாக புகார் சொல்லும் குடியிருப்பாளர்கள்