சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின் கவனத்திற்கு.. மீறினால் கடும் தண்டனை

சிங்கப்பூர் வரும் அல்லது செல்லும் பயணிகளின்
shawnanggg/Unsplash

சிங்கப்பூர் வரும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதிகாரிகளிடம் முறையாக தகவல் அளிக்க வேண்டும்.

சட்டத்தின்படி, சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது நாட்டை விட்டு வெளியேறும்போதோ S$20,000க்கு மேல் பணத்தை வைத்திருந்தால் அதிகாரிகளிடம் தகவலை தெரிவிக்க வேண்டும்.

ஆனால், இனி அவ்வாறு ரொக்கம் வைத்திருந்தால் இணையத்தில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் மே மாதம் 13 ஆம் தேதி நடப்புக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

பயணிகளின் பண அஞ்சல் விவரம், பரிமாற்ற பில்கள், உறுதிமொழித் தாள்கள் மற்றும் காசோலை போன்றவை குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

எப்படி செய்வது?

குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) இணையதளத்தில் (https://go.gov.sg/cbnideclaration) சமர்ப்பிக்கலாம் அல்லது MyICA கைப்பேசி செயலி மூலமாகவோ சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளை அடைவதற்கு முன் பயணிகள் தங்கள் தகவலை சமர்ப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் வருவதற்கு அல்லது புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சமர்ப்பிப்பு வெற்றிகரமாக முடிந்தால் பயணிகளுக்கு ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பப்படும். தேவைப்படும்போது அதனை சான்றாக பயன்படுத்தலாம்.

சிங்கப்பூர் 4D லாட்டரி.. 3 குலுக்கலுக்கு விற்றுத் தீர்ந்த 1505 என்ற எண்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?