நீங்க வந்தா மட்டும் போதும்…..விசா தேவையில்லை… இந்தியர்களுக்கு அழைப்பு!

Photo: Changi Airport

 

மேற்காசிய நாடான ஈரான் அரசு, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நான்கு லாரி, 2 டிரக் மோதி கடும் விபத்து: சம்பவ இடத்திலேயே 28 வயதுமிக்க ஆடவர் மரணம் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

அதன் ஒருபகுதியாக, இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், ஈரான் நாட்டிற்கு சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என்று ஈரான் நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், சவூதி அரேபியா, கத்தார், குவைத், லெபனான், இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, கம்போடியா, வியட்னாம், பிரேசில் பெரு, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளின் பயணிகளுக்கு ஈரான் சென்று வர விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

ஏற்கனவே, மலேசியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.