கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிய ‘ItsRainingRaincoats’!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிய 'ItsRainingRaincoats'!
Photo: ItsRainingRaincoats

 

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் தன்னார்வ அமைப்பு ‘ItsRainingRaincoats’. மேலும், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் பரிசுகளை வழங்கியும், அவ்வப்போது, சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றும், வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்து வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது, வெளிநாட்டு ஊழியர்களுக்கு ‘ItsRainingRaincoats’ சார்பில், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று உணவுகளையும் வழங்கி வருகிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்

அதன் தொடர்ச்சியாக, வரும் டிசம்பர் 25- ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு குடைகள், பவர் பேங்க்-கள் உள்ளிட்ட பரிசுகளை ‘ItsRainingRaincoats’ பணியாளர்கள் வழங்கினர். அந்த பரிசுகளை பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் இன்ப முகத்துடன் நன்றியும், கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கிய 'ItsRainingRaincoats'!
Photo: ItsRainingRaincoats

சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் போலீசார்

மற்றவர்களும் துண்டுகள், கையடக்க மின்விசிறிகள், கெட்டில்கள், குடைகள் உள்ளிட்டவற்றை பேக்கிங் செய்து எங்களிடம் வழங்கினால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று ‘ItsRainingRaincoats’ அமைப்புத் தெரிவித்துள்ளது.