சென்னையில் இருந்து சிங்கப்பூர்.. குறிப்பு எழுதி வைத்துச்சென்ற விமானி – 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளான பயணிகள்

சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணி Chennai airport customs restricts carrying sweets
Passengers in Chennai airport

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் சுமார் 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளானார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது.

மசாஜ் நிலையங்களில் அந்த மாறி சேவை: பிடிபட்ட 3 பெண்கள் – உரிமம் இல்லாமல் செயல்பட்ட நிறுவனங்கள்

சோதனைகளை முடித்த சுமார் 168 பயணிகள், சிங்கப்பூர் வர தயாராக இருந்துள்ளனர்.

இந்த விமானம் வழக்கமாக சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவு 11.45 மணிக்கு செல்லும், அதே போல சென்னையில் இருந்து நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் வரும்.

ஆனால், விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதாக விமானி குறிப்பு எழுதிவைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டதால் பயணிகள் விரக்தி அடைந்தனர்.

அந்த நிலையில், காலை 6 மணி வரையிலும் விமானம் புறப்படவில்லை இதனால் பயணிகள் கடுமையாக கோபமடைந்தனர்.

விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்த பயணிகள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊழியர்கள் நடந்ததை கூறி பயணிகளை சமாதானப்படுத்தினர்.

இறுதியாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு சரியாக அடுத்த நாள் மதியம் 1.45க்கு விமானம் புறப்பட்டு சிங்கப்பூர் வந்தது.

இதனால் பயணிகள் சுமார் 12 மணிநேரம் கடும் அவதிக்குள்ளானார்கள்.

தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த புத்தி சுவாதீனம் இல்லா மகன்