உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்கள்.. 2ம் இடத்தை பிடித்த சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்

உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்கள்.. 2ம் இடத்தை பிடித்த சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்
Skytrax website

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

முதலிடத்தை, கத்தார் – தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் பிடித்து சாதித்துள்ளது.

சாங்கி விமான நிலையம் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும், ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஸ்கைட்ராக்ஸ் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் இந்த அறிவிப்பு வெளியானது.

நேற்று (ஏப்., 17) பிராங்பேர்ட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தரவரிசை பட்டியலில் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது, அதே போல ஜப்பானின் ஹனேடா சர்வதேச விமான நிலையம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த குடிநுழைவு சேவைகளை வழங்கும் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முழு பட்டியல் – worlds-top-100-airports-2024

சிங்கப்பூர் 4D லாட்டரி.. 3 குலுக்கலுக்கு விற்றுத் தீர்ந்த 1505 என்ற எண்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?