சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர்.. அனுமதித்த முதலாளிகளுக்கு செக்

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்
MOM

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் வாங்கி, பல இடங்களில் வேலை செய்த வெளிநாட்டவர் உட்பட அவரை வேலை செய்ய அனுமதித்த முதலாளிகளும் சிக்கினர்.

வேலைக்காக வேண்டி சிங்கப்பூர் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பணிப்பெண்ணை பகுதிநேரமாக பல வீடுகளில் வேலை செய்ய அனுமதித்த நூர்கைரூல் அசிஸ் என்ற முதலாளிக்கு தற்போது 6 வார சிறைத் தண்டனையும், $S6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நூர்கைரூல் அசிஸ்க்கு உதவியாக இருந்த அவரின் மனைவிக்கும் 6 வார சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த சட்டத்திற்கு புறம்பான வேலையில் ஈடுபட்ட வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு அதே போல 6 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மனிதவள அமைச்சு கடந்த 2022இல் பீச் ரோட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த பணிப்பெண் சிக்கினார்.

நூர்கைரூல் வீட்டில் வேலைக்காக வந்த அந்த பணிப்பெண் 7 மாதங்களில் 7 இடங்களில் வேலைசெய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பளமாக மொத்தம் $S2,000 ஈட்டியதும் தெரியவந்தது.

இதற்கு முன்பாக அந்த முதலாளி $S6,500 பெற்றுக்கொண்டு பணிப்பெண்ணுக்கு ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்றுத்தந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்