ஒர்க் பெர்மிட், S Pass அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்காக வரவுள்ள மாற்றங்கள்

work permit salary increase
Pic: MOM

ஒர்க் பெர்மிட் (work permit) அனுமதி கட்டமைப்பில் மாற்றங்களை செய்யவுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார்.

கடல்சார் துறைக்கான ஒர்க் பெர்மிட் கட்டமைப்பில் மாற்றங்கள் 2026 ஆம் ஆண்டு ஜன.1 முதல் நடப்புக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம்

வெளிநாட்டு ஊழியர் சார்பு விகிதம் குறைப்பு

அதில், DRC என்னும் அந்த துறைக்கான சார்பு விகித உச்சவரம்பு படிப்படியாக குறைக்கப்படும், தற்போது 77.8 சதவீதம் இருக்கும் DRC 75 சதவீதமாகக் குறைக்கப்படும்.

DRC என்பது ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும் மொத்த ஊழியர்களின் விகிதத்தில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் அதிகபட்ச விகிதமாகும்.

இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் ஒவ்வொரு உள்ளூர் ஊழியருக்கும் இணையாக அதிகபட்சம் “மூன்று ஒர்க் பெர்மிட் அனுமதி அல்லது எஸ் பாஸ் அனுமதி” வைத்திருக்கும் ஊழியர்களை வேலைக்கு எடுக்கலாம்.

தற்போது இருக்கும் அனுமதியை விட புதிய மாற்றத்தின்கீழ், வெளிநாட்டு ஊழியர்களுக்கான அனுமதி குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி உயர்வு

இத்துறையில், அடிப்படை-திறன் (basic-skilled) கொண்ட ஒர்க் பெர்மிட் அனுமதி வைத்திருக்கும் ஊழியர்களுக்கான வரி (தீர்வை) $400ல் இருந்து $500 ஆக உயர்த்தப்படும்.

அதே போல, அதிக-திறன் (higher-skilled) கொண்ட ஒர்க் பெர்மிட் அனுமதி வைத்திருக்கும் ஊழியர்களுக்கு $300ல் இருந்து $350 ஆகவும் வரி உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் 2026 ஜன.1, முதல் நடப்புக்கு வரும் என அமைச்சர் டான் குறிப்பிட்டார்.

புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் திறமைகளை எல்லா நிலைகளிலும் தக்கவைக்க, வெளிநாட்டினருக்கான வேலை அனுமதி கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய E Pass வேலை அனுமதிக்கு சம்பளம் உயர்வு – 2025 முதல் அமல்