“சிங்கப்பூரில் செலவு அதிகம்… இங்கு வந்தால் ஏழை தான்” – நெட்டிசன்களிடையே வலுக்கும் விவாதம்

சிங்கப்பூர்
Unsplash

புத்தாண்டு வார இறுதியில் ஒரு நாள் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது, ​​எதிர்பார்த்ததை விட அதிகமான செலவு இருந்ததாக சுற்றுலா வந்த பயணி ஒருவர் கூறினார்.

உணவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம் என்று கூறிய அவர், அதனால் தனது பயண பட்ஜெட்டில் 30 சதவீதம் செலவு அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?

இந்தோனேசியாவுக்கு செல்லும் வழியில் அவர் ஒரு நாள் சிங்கப்பூரில் தங்கியுள்ளார், அவர் தங்கிய அந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 1,500 யுவான் (S$280) செலவானதாக கூறினார்.

ஆனால் இந்தோனேசியாவில், ஒரு நாளைக்கு 500 முதல் 600 யுவான் வரை மட்டுமே செலவானதாக அவர் சொன்னார்.

விமான நிலையத்தில் விற்பனைக்கு இருந்த நினைவுப் பொருட்களுக்கும் விலை மிகவும் அதிகம் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவர் கூறினார்.

சிங்கப்பூர் விசா இல்லாத புதிய பயண முறையை சீனாவுடன் சேர்ந்து அறிவித்தது. அதன்படி பயணிகள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கிக்கொள்ளலாம்.

“விசா இல்லை, ஆனால் சிங்கப்பூரில் அதிக செலவு” இருப்பதாக சீன ஊடகங்களில் விவாதம் தலை தூக்கி இருந்தது.

சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் தளமான Weibo-வில் “விசா இல்லா சிங்கப்பூர் பயணத்தில் கவனமாக இல்லாவிட்டால், பயணிகள் ஏழைகளாக மாற கூடும்” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

அந்த ஹேஷ்டேக் சுமார் 310 மில்லியன் பார்வைகளைப் பெற்றது, மேலும் 9,000 க்கும் மேற்பட்ட விவாதத் தொடரைத் தூண்டியது.

சிங்கப்பூர் விதிக்கும் அபராதம், அதாவது MRT ரயில்களில் சாப்பிடுவதற்கு $500 அல்லது தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்ததற்கு, பொது இடங்களில் எச்சில் துப்புதல் அல்லது குப்பைகளை போட்டால் $1,000 அபராதம் போன்றவற்றால் இங்கு செலவு அதிகமாக உள்ளது என்று சிலர் விவாதித்தனர்.

இருப்பினும், சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் விலை குறைவு தான் என சிலர் கூறினர்.

விவாதம் எப்படி இருந்தாலும், சிங்கப்பூருக்கு வரும் சீனப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?