ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை ஏன் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கிறது.

நம் தளத்திலும் அதிகமானோர் கேட்ட கேள்வியாகவும் அது இருக்கிறது. அதற்கான பதிலை சிங்கப்பூர் அரசாங்கமே கூறியுள்ளது.

சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் “Reinventing Destiny IPS” என்ற மாநாடு ஒன்று நடந்தது, அதில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொண்டு பேசினார்.

அதில் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ராஃபிள்ஸ் நிறுவன மாணவர் ஒருவர் முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த வோங், வெளிநாட்டு ஊழியர்களின் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னால் முடித்த அனைத்தையும் சிங்கப்பூர் அரசாங்கம் செய்வதாக கூறினார்.

மாணவர் மேலும் கேட்டதாவது:

வெளிநாட்டு ஊழியர்கள் இன்னமும் ஒதுக்கப்படுகின்றனர் என்றும், அவர்களை ஒருங்கிணைக்க மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் மாணவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தற்போதைய Work permit வேலை அனுமதி முறை, சிங்கப்பூரர்களுடன் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பு கொள்வதற்குத் தடையாக இருப்பதாக உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.

அதோடு நிறுத்தாமல் பேசிய மாணவர்.., வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்த உறவுகளை சிங்கப்பூர் அழைத்து வருவது முதற்கொண்டு, நிரந்தர வாசம் அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதை தடுக்கும் சட்டங்கள், அவர்கள் வெறுமனவே ஊழியர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறதா என மாணவர் கேட்டார்.

துணை பிரதமரின் பதில்கள் பின்வருமாறு:

கோவிட் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் செய்த தியாகங்களையும், குடியிருப்புகள் முதல் துறைமுகங்களில் பணிபுரிவது வரை சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப அவர்கள் செய்த பங்களிப்புகளையும் தாம் நினைவு கூறுவதாக துணை பிரதமர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொருளாதாரத்தின் மிக முக்கிய பங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு உண்டு என்பதை கூறி, அவர்களுக்கு நன்றியையும் வெளிப்படுத்தினார் திரு.வோங்.

“எனவே, வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக Work permit வைத்திருப்பவர்கள் இங்கு பாதுகாப்பாக வேலை செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு சிங்கப்பூரில் நல்ல வாழ்க்கை சூழல் இருப்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரங்கள் உயர்த்தப்பட்டது குறித்தும் அவர் கூறினார்.

ஏன் PR, Citizenship வழங்கப்படுவதில்லை?

வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நிரந்தரவாசிகளாக மாறினால் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களைக் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தால் அதிகமான சவால்களை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

மேலும் அவர்கள் அனைவரையும் நம் சமூகத்தில் ஒருங்கிணைப்பது சுலபமானது அல்ல என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அதன் சமநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் மத்தியில் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர் என்றும், சிங்கப்பூர் அவர்களை எப்போதும் வரவேற்பதாகவும் வோங் கூறினார்.

இருப்பினும், ஒர்க் பெர்மிட் அனுமதி முதல் E பாஸ் அனுமதி வரையுள்ள வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு “சிறிய குழுவினருக்கு” PR ஆகவும், இறுதியில் நாட்டின் குடிமக்களாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?