சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

சிங்கப்பூரில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் TOTO, 4D போன்ற லாட்டரிகளை வாங்கலாம். அதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.

ஆனால், நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட உங்களுடைய வயதும் தகுதியானதாக இருக்க வேண்டும்.

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

வெளிநாட்டில் வசித்து கொண்டு சிங்கப்பூரில் லாட்டரி வாங்க இயலாது, ஏனெனில் Singpass கட்டாயம் தேவைப்படும்.

ஒருவேளை நீங்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துவிட்டால், பரிசுத்தொகையை பெற நீங்கள் சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது சிங்கப்பூர்வாசியாகவோ (PR) இருக்கத்தேவையில்லை.

நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் விசா பெற்று வசிப்பதைக் காட்டினால் போதுமானது. அதாவது Work pass வேலை அனுமதி, முகவரி போன்ற சான்றுகளை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

வேறு எந்த ஆவணங்களும் தேவைப்படாது. சில நேரங்களில் பெரிய அளவிலான தொகையை வெல்லும் போது, உங்களுக்கு சிங்கப்பூரில் நிரந்தரவாசம் PR பெறக்கூட வாய்ப்பிருக்கிறது.

பரிசுக்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

சிங்கப்பூரில் நீங்கள் வெல்லும் பரிசு தொகைக்கு வரி கட்ட வேண்டியது இல்லை.

சிங்கப்பூரில், IRAS (சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்) இணையப் பக்கத்தின்படி; “4D, TOTO, கால்பந்து, சிங்கப்பூர் ஸ்வீப், குதிரைப் பந்தயம், ஜாக்பாட் வெற்றிகள் போன்ற பந்தயம் மூலம் கிடைத்த வெற்றிகளுக்கு சிங்கப்பூரில் வரி விதிக்கப்படாது.

ஏனெனில் அந்த வருமானம் ஈட்டும் வழி இயல்புடையவை அல்ல.  உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் இருவருக்கும் இது ஒரே மாதிரியாக இருக்கும்.

இருப்பினும் நீங்கள் வென்ற பணத்தை உங்கள் நாட்டுக்கு அனுப்ப அங்கு வரி விதிக்கப்படலாம்.

ஆகையால், அந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைத்து வரி விலக்கு பெறலாம்.

வரும் பிப்.23 அன்று பிரம்மாண்ட குலுக்கல்

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது