சிங்கப்பூரில் குடியுரிமை வேண்டும்.. திருமணம் செய்த வெளிநாட்டினர் 8 பேர் கைது

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூர் குடியுரிமை பெறுவதற்காக திருமணம் செய்தது தொடர்பான குற்றங்களுக்காக 8 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 இல் 8 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2022 இல்) அது 9 ஆக இருந்தது.

மது போதையில் இருக்கும் பெண்களிடம் உறவு கொண்டு படம்பிடித்த ஆடவர் – சிறை, பிரம்படிகள் விதிப்பு

2022 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் குடிநுழைவு வசதிகளைப் பெறுவதற்காக சிங்கப்பூரர்களுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபடும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ICA சுட்டிக்காட்டியது.

அதே போல, அந்த திருமண வசதிகளை எளிதாக்கி கொடுக்கும் நபர்கள் மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கையை எடுக்கப்படும் என அது எச்சரிக்கை செய்துள்ளது.

வேலைக்கு எடுத்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்குமிடத்தை சோதிக்காத முதலாளிகள் 123 பேர் கைது